Abirami Anthathi Lyrics in Tamil

Abirami Anthathi Lyrics in Tamil

 

நூல்
1. உதிக்கின்ற செங்கதிர், உச்சித்திலகம், உணர்வுடையோர்
மதிக்கின்ற மாணிக்கம், மாதுளம்போது மலர்க்கமலை
துதிக்கின்ற மின்கொடி, மென்கடிக் குங்கும தோயம் என்ன
விதிக்கின்ற மேனி அபிராமி என்தன் விழுத்துணையே

2 துணையும், தொழும்தெய்வமும் பெற்றதாயும், சுருதிகளின்
பணையும், கொழுந்தும் பதிகொண்ட வேரும்பனி மலர்ப்பூங்
கணையும், கருப்புச்சிலையும், மென் பாசாங்குசமும், கையில்
அணையும் திரிபுர சுந்தரி ஆவது அறிந்தனமே

3.அறிந்தேன் எவரும் அறியா மறையை, அறிந்துகொண்டு
செறிந்தேன், உனது திருவடிக்கே,. திருவே! வெருவிப்
பிறிந்தேன், நின் அன்பர் பெருமை எண்ணாத கருமநெஞ்சால்
மறிந்தே விழுநரகுக்கு உறவாய மனிதரையே!

  1. மனிதரும், தேவரும், மாயா முனிவரும், வந்து சென்னிக்
    குனிதரும், சேவடிக்கோமளமே! .கொன்றை வார்சடைமேல்
    பனிதரும், திங்களும், பாம்பும் பகீரதியும் படைத்த
    புனிதரும் நீயும்மென்புந்தி எந்நாளும் பொருந்துகவே.

  2. பொருந்திய முப்புரை, செப்புரை செய்யும் புணர்முலையால்,
    வருந்திய வஞ்சி மருங்குல் மனோன்மணி! வார்சடையோன்
    அருந்திய நஞ்சு அமுதுக்கிய அம்பிகை அம்புயம் மேல்
    திருந்திய சுந்தரி, அந்தரி, பாதம் என் சென்னியதே.

  3. சென்னியது உன்பொற் திருவடித்தாமரை. சிந்தையுள்ளே
    மன்னியது உன்திரு மந்திரம் சிந்துர வண்ணப் பெண்ணே
    முன்னிய நின் அடியாருடன் கூடி, முறை முறையே
    பன்னியது, என்றும் உந்தன் பரமாகம பத்ததியே

  4. ததியுறு மத்திற் சுழலும் என் ஆவி, தளர்விலதோர்
    கதியுறு வண்ணம் கருதுகண்டாய் கமலாலயனும்
    மதியுறு வேணி மகிழ்நனும், மாலும், வணங்கி என்றும்
    துதியுறு சேவடியாய். சிந்துரானன சுந்தரியே!

  5. சுந்தரி, எந்தை துணைவி, என் பாசத் தொடரையெல்லாம்
    வந்தரி, சிந்துர வண்ணத்தினாள், மகிடன் தலைமேல்
    அந்தரி, நீலி, அழியாத கன்னிகை, ஆரணத்தோன்
    கந்தரி கைத்தலத்தாள் மலர்த்தாள் என் கருத்தனவே.

  6. கருத்தன, எந்தைதன் கண்ணன் வண்ணக் கனகவெற்பில்
    பெருத்தன, பால் அழும் பிள்ளைக்கு நல்கின, பேர் அருள்கூர்
    திருத்தன பாரமும், ஆரமும், செங்கைச் சிலையும், அம்பும்,
    முருத்தன மூரலும், நீயும், அம்மே! வந்து என்முன் நிற்கவே

  7. நின்றும் இருந்தும் கிடந்தும் நடந்தும் நினைப்பதுன்னை,
    என்றும் வணங்குவது உன்மலர்த்தாள்! எழுதாமறையின்
    ஒன்றும் அரும் பொருளே! அருளே! உமையே! இமயத்து
    அன்றும் பிறந்தவளே! அழியாமுத்தி ஆனந்தமே!

  8. ஆனந்தமாய், என் அறிவாய், நிறைந்த அமுதமுமாய்,
    வான் அந்தமான வடிவுடையாள், மறை நான்கினுக்கும்
    தான்ந்தமான, சரணார விந்தந் தவளநிறக்
    கானம்ந்தம் ஆடரங்காம் எம்பிரான் முடிக் கண்ணியதே.

  9. கண்ணியது உன் புகழ், கற்பது உன் நாமம், கசிந்துபக்தி
    பண்ணியது உன் இரு பாதாம் புயத்தில், பகல் இரவா
    நண்ணியது உன்னை நயந்தோர் அவையத்து. நான்முன்செய்த
    புண்ணியம் ஏது? என் அம்மே! புவி ஏழையும் பூத்தவளே!

  10. பூத்தவளே! புவனம் பதினான் கையும் பூத்தவண்ணம்
    காத்தவளே! பின் கரந்தவளே! கறைக் கண்டனுக்கு
    மூத்தவளே! என்றும் மூவா முகுந்தற்கு இளையவளே!
    மாத்தவளே! உன்னை அன்றி மற்றோர் தெய்வம் வந்திப்பதே

  11. வந்திப்பவர் உன்னை, வானவர் தானவர் ஆனவர்கள்,
    சிந்திப்பவர், நற்றிசைமுகர் நாரணர் சிந்தையுள்ளே
    பந்திப்பவர், அழியாப்பர மானந்தர், பாரில் உன்னைச்
    சந்திப்பவர்க்கு எளிதாம்- எம்பிராட்டி! நின் தண்ணளியே!

  12. தண்ணளிக்கு என்று முன்னே பலகோடி தவங்கள் செய்வார்,
    மண்ணளிக்கும் செல்வமோ பெறுவார்? மதி வானவர்தம்
    விண்ணளிக்கும் செல்வமும், அழியாமுத்தி வீடும், அன்றோ?
    பண்ணளிக்கும் சொற் பரிமள யாமளைப் பைங்கிளியே!

  13. கிளியே! கிளைஞர் மனத்தே கிடந்து கிளர்ந்து ஒளிரும்
    ஒளியே, ஒளிரும் ஒளிக்கு இடமே, எண்ணில் ஒன்றும் இல்லா
    வெளியே, வெளிமுதற் பூதங்களாகி விரிந்த அம்மே!
    அளியேன் அறிவு அளவிற்கு அளவானது அதிசயமே!

  14. அதிசயமான வடிவுடையாள், அரவிந்தமெல்லாம்
    துதிசய வானன சுந்தரவல்லி, துணை இரதி
    பதிசய மானது அபசயம் மாக, முன் பார்த்தவர் தம்
    மதிசய மாக அன்றோ வாம பாகத்தை வவ்வியதே.

  15. வவ்விய பாகத்து இறைவரும் நீயும் மகிழ்ந்திருக்கும்
    செவ்வியும், உங்கள் திருமணக் கோலமும், சிந்தையுள்ளே
    அவ்வியம் தீர்த்து என்னை ஆண்ட பொற்பாதமும் ஆகிவந்து
    வெவ்விய காலன் என் மேல்வரும் போது, வெளிநிற்கவே

  16. வெளிநின்ற நின் திருமேனியைப் பார்த்து என் விழியும் நெஞ்சும்
    களிநின்ற வெள்ளம் கரை கண்டதில்லை, கருத்தினுள்ளே
    தெளிகின்ற ஞானம் திகழ்கின்றது என்ன திருவுளமோ?-
    ஒளிநின்ற கோணங்கள் ஒன்பதும் மேவி உறைபவளே!

  17. உறைகின்ற நின்திருக் கோயில் நின் கேள்வர் ஒரு பக்கமோ
    அறைகின்ற நான்மறையின் அடியோ? முடியோ? அமுதம்
    நிறைகின்ற வெண்திங்களோ? கஞ்சமோ? எந்தன் நெஞ்சகமோ?
    மறைகின்ற வாரிதியோ? பூரணாசல மங்கலையே?

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *